தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 : இன்று வேட்புமனு பரிசீலனை

Published On:

| By Pandeeswari Gurusamy

Election 2026 Code of Conduct

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (கொளத்தூர் தொகுதி), தவெக தலைவர் விஜய் (பெரம்பூர் தொகுதி) ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமகவின் சௌமியா அன்புமணி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 7) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் தள்ளுபடியான வேட்புமனுக்களின் விவரங்கள் இன்று பிற்பகலில் தெரியவரும்.

ADVERTISEMENT

வேட்பாளர் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற வரும் 9ம் தேதி கடைசி நாளாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share