FD-க்கு 7.30% வரை வட்டி! SBI, HDFC, ICICI, இந்தியன் வங்கிகளில் இப்போது எவ்வளவு கிடைக்கும்?

Published On:

| By Minnambalam Desk

பணத்தை வங்கியில் நிலையான வைப்புத்தொகையாக (FD) போட்டு, பாதுகாப்பாக வருமானம் பார்க்க நினைப்பவர்கள், எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தருகிறார்கள் என்று பார்த்துவிட்டுப் போடுவதுதான் புத்திசாலித்தனம்.

இந்த அக்டோபரில் ஐசிஐசிஐ வங்கியும் இந்தியன் வங்கியும் சில காலத்துக்கான எஃப்டி வட்டியை உயர்த்தியுள்ளன. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் தங்கள் விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

ADVERTISEMENT

ஐசிஐசிஐ வங்கி

ரூ.3 கோடிக்குக் கீழான எஃப்டி-களுக்கு, குறிப்பிட்ட காலங்களில் 0.10 சதவீதப் புள்ளி வட்டியைக் கூட்டியுள்ளது.

ADVERTISEMENT

இது அக்டோபர் 23, 2026 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. 3 ஆண்டுகள் ஒரு நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்குப் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.60% வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு இதே காலத்துக்கு 7.20% வரை.

இந்தியன் வங்கி – 7.30% வரை

ADVERTISEMENT

இந்தியன் வங்கியின் சிறப்பு எஃப்டி திட்டங்களான இண்ட் க்ரோ (555 நாட்கள்), இண்ட் ப்ராஸ்பர் (777 நாட்கள்) இரண்டிலும் வட்டி கூடியுள்ளது.

555 நாள் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.80%, மூத்த குடிமக்களுக்கு 7.30%. 777 நாள் திட்டத்தில் முறையே 6.75%, 7.25%. இந்த விகிதங்களும் அக்டோபர் 23 முதல் அமலில் உள்ளன.

எஸ்பிஐ-யில் எவ்வளவு?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குள் முடியும் எஃப்டி-களுக்குப் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 6.40% வட்டி தருகிறது. மூத்த குடிமக்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.05% வரை கிடைக்கும். எஸ்பிஐ வீ-கேர் திட்டமும் இதில் அடங்கும்.

ஹெச்டிஎஃப்சி வங்கி

3 ஆண்டுகள் ஒரு நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குள் முடியும் எஃப்டி-களுக்குப் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.50%, மூத்த குடிமக்களுக்கு 7.10% வட்டி வழங்குகிறது.

வட்டி விகிதங்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், பணம் போடும் முன் அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share