மதம் கடந்த மனிதத்தை பேசிய அயோத்தி, பட்டியலின மக்களுக்கு எதிரான சாதி பாகுபாட்டின் வலியை எடுத்து பேசிய நந்தன் திரைப்படத்தை தொடர்ந்து சசிக்குமார் நடிப்பில் நாளை (மே 1) வெளியாக டூரிஸ்ட் ஃபேமிலி. sasikumar request audience after tourist family show
24 வயதான அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ள இப்படத்தில் சசிக்குமாருடன் சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தின் ‘ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து படம் குறித்து பலரும் பாசிட்டிவான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் அபிஷன் ஜீவிந் கண்கலங்கியபடியே பேசினார்.
அவர், ”இந்த நாளுக்காகத்தான் இத்தனை நாள் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். இவ்ளோ ரெஸ்பான்ஸ் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காமெடி சீன், கிளைமாக்ஸ் சீன் என எல்லா சீனுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது” என உருக்கத்துடன் பேசினார்.
அவரை தேற்றியபடி நடிகர் சசிகுமார் பேசுகையில், “அபி (இயக்குநர்) இனிமேல் நீங்கள் அதிகம் எமோஷனல் ஆக வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இயக்குநருக்கு 24 வயதுதான். ஆனால் படத்தை தயாரித்தவர்கள் வயதை பார்க்காமல் ஸ்கிரிப்டை பார்த்து படம் தயாரித்துள்ளார்கள். சினிமாவுக்கு வயது முக்கியமில்லை ஸ்கிரிப்ட் தான் முக்கியம் என நிரூபித்துள்ளார்கள்.
நிச்சயம் தியேட்டரில் மக்கள் பார்த்து இப்படத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள். எல்லா நாடுகளிலும் இது நடக்கும். அயோத்தி மற்றும் நந்தனை போலவே, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அகதிகளின் வலியை அழுத்தமாகச் சொல்லும். ஒரே ஒரு வேண்டுகோள். படத்தின் கடைசி பத்து நிமிடத்தை யாரிடமும் சொல்லாதீர்கள்” என அவர் கேட்டுக் கொண்டார்.