இயக்குநராக அறிமுகமாகும் விஜே சித்து… வரவேற்ற தனுஷ்

Published On:

| By christopher

dhanush welcomed vj siddu directorial debut

பிரபல யூடியூபராக அறியப்பட்ட விஜே சித்து, தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். dhanush welcomed vj siddu directorial debut

தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகம் ஆனவர் சித்து. அதன்பின்னர் தனது பெயரிலேயே யூடியூப் சேனல் தொடங்கி, அதில் தனது பயணத் தொகுப்புகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதில் 46 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக, இதுவரை அவர் டிரிப், டிராகன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

dhanush welcomed vj siddu directorial debut

ADVERTISEMENT

அவரது அடுத்த பரிமாணமாக, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் விஜே சித்து. அதில் ஹீரோவாகவும் அவர் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் அவரது படத்தின் டைட்டிலை வெளியிட்டு, இயக்குநர் அவதாரமெடுக்கும் சித்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

ADVERTISEMENT

அதில், “டயங்கரம் படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி. தான் இயக்கும் முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமாகும் விஜே சித்துவுக்கு வாழ்த்துகள். சினிமா உலகிற்கு வரும் உங்களுக்கும், படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷுக்கும் வாழ்த்துகள்” என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் வெளியிட்ட விஜே சித்துவின் டைட்டில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vlog இல்ல படம் ✋🤚| Title Announcement | Vj Siddhu Vlogs

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share