சேலம் வடக்கு தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 வாக்காளர்கள் – மொத்தம்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் வெற்றி பெற்றார்.  2016, 2021 ஆகிய தேர்தல்களில் திமுக வேட்பாளர் பனமரத்துப்பட்டி ரா. ராஜேந்திரன் வெற்றி பெற்றார். தற்போது இவர் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். 

மீண்டும் 2026 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். 

என்டிஏ கூட்டணியில் பாமக வேட்பாளர் சதாசிவம், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சிவகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குணசீலா ஆகியோர் சேலம் வடக்கு தொகுதியில் களம் காண்கின்றனர். 

நமது சர்வே முடிவுபடி, 

திமுக- 46%
அதிமுக-34%
தவெக-15%
நாதக-5%
வாக்குகள் பெறும்

மீண்டும் அமைச்சர் ரா.ராஜேந்திரன் இந்த தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? சேலம் | Salem | Minnambalam Mega Survey Results 2026| Election 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share