தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
சைதாப்பேட்டை வாக்காளர்கள் – மொத்தம் – 2,00,697

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளரான அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலுவான வேட்பாளராக இருக்கிறார். என்னென்றால் தனது தொகுதியில் கட்சி நிர்வாகிகளுக்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். பகுதிச் செயலாளர்களுக்கு மண்டல பொறுப்பு வழங்கியிருக்கிறார். வட்ட செயலாளர்களுக்கு ஸ்லம் கிளியரன்ஸ் போர்டு மூலம் வீடு ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.
அரசு மருத்துவமனைகளில் ஓ.ஏ மற்றும் கிளீனிங் வேலைகளுக்குத் தொகுதி மக்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கார். அதனால் அவருக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் நல்ல பிடிப்பு இருக்கிறது.
அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் அமமுக வேட்பாளர் செந்தமிழன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருள் பிரகாசம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீவித்யா ஆகியோர் களம் காண்கின்றனர்.
2021 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை 29,408 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் மா.சுப்பிரமணியன்
இந்த தேர்தலில் நமது சர்வே முடிவுபடி,
திமுக- 43%
அதிமுக-29%
தவெக-20%
நாதக-6% வாக்குகள் பெறும்
சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
