ரூ.651 கோடி பறிமுதல் : தேர்தல் ஆணையம்!

Published On:

| By Kavi

தேர்தல் காரணமாக பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 651 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன .

ADVERTISEMENT

வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில் 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.651 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு வங்கத்தில் 11 கோடி ரூபாய், தமிழகத்தில் 30 கோடி ரூபாய், அசாமில் 4 கோடி ரூபாய், கேரளாவில் 8 கோடி ரூபாய், புதுச்சேரியில் 0.2 கோடி ரூபாய் என ரொக்கமாக 53.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதுபோன்று மேற்கு வங்கத்தில் 21,29,103 லிட்டர் மதுபானமும், தமிழகத்தில் 74,029 லிட்டர், அசாமில் 6,84,627, கேரளாவில் 64,862, புதுச்சேரியில் 11,068 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 79.3 கோடி ரூபாய் ஆகும். 

ADVERTISEMENT

இது தவிர 230 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

58 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 231 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள் என மொத்தமாக 651.51 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share