ரிஷிவந்தியம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 ரிஷிவந்தியம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

2011ல் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் வெற்றி பெற்ற தொகுதி.

அப்போதுதான் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். அதுக்கு பிறகு 2016, 2021-ல் திமுகவின் வசந்தம் கார்த்திகேயன் வெற்றி பெற்றார். 3-வது முறையாக திமுகவின் வசந்தம் கார்த்திகேயன் களம் காண்கிறார். 2021 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்கேடிசி ஏ சந்தோஷை 41,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அதிமுக கூட்டணியில பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில செழியன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் தேமுதிகவும் காங்கிரஸும் இந்த தொகுதிக்காக மல்லுக்கட்டிப் பார்த்தன.. ஆனால் திமுக விட்டுத் தரவில்லை.

இந்த தொகுதியில் காங்கிரஸுக்கும் கணிசமான வாக்குகள் இருக்கிறது. 1984-ல் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்ற சிவராஜ், 1996, 2001-ல் தமாகா வேட்பாளராகவும் 2006-ல் காங்கிரஸ் வேட்பாளராகவும் 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

தவெக சார்பில் அசோக்குமார், நாதக சார்பில் ராதிகா ஆகியோர் களம் காண்கின்றனர்

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி- 47%
அதிமுக கூட்டணி-32%
தவெக-15%
நாதக-5% வாக்குகள் பெறும்

திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் ஹாட்ரிக் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கள்ளக்குறிச்சி | kallakurichi | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share