சும்மா சொல்லக்கூடாதுங்க, நேத்துல இருந்து சோஷியல் மீடியா பக்கம் போனாலே Ranbir Kapoor-ன் அந்த வீடியோதான் கண்ணுல படுது. பாலிவுட் Chocolate boy-னு சொல்லிக்கிட்டு இருந்த ரன்பீர், இப்போ ஸ்ரீராமரா அவதாரம் எடுத்திருக்கார். இதைப் பத்தி அவர் லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடந்த ஒரு ஸ்பெஷல் ஈவென்ட்ல பேசினதுதான் இப்போ பயங்கர ட்ரெண்டிங். பொதுவாகவே ஒரு பெரிய ஹீரோ படம்னா செம Hype இருக்கும், அதுவும் ‘ராமாயணம்’ மாதிரியான ஒரு காவியத்தை படமா எடுக்குறாங்கன்னா கேட்கவா வேணும்? அப்படிப்பட்ட சமயத்துல இந்த வீடியோ பெரிய வைரல் content ஆகியிருக்கு. அப்படி என்ன இருக்கு தெரியுமா?
எல்லோருக்கும் புரியும் ஒரு எமோஷன்
அங்க இருந்த ஒரு IMAX தியேட்டர்ல படத்தோட ஒரு சின்ன Glimpse திரையிடப்பட்டிருக்கு. அங்க பேசின ரன்பீர் ரொம்பவே எதார்த்தமா ஒரு விஷயம் சொன்னாரு. “ராமர்ங்கிறது வெறும் ஒரு புராணக் கதாபாத்திரம் கிடையாது, அவர் பல நூறு கோடி மக்களோட மனசாட்சி” அப்படின்னு அவர் சொல்லும்போது தியேட்டரே அதிருச்சுங்க. ஆடியன்ஸ் எல்லாம் ‘ஜெய் ஸ்ரீராம்னு’ கத்தி ஆரவாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதுமட்டுமல்ல, ரன்பீர் வழக்கமான ஹீரோ பந்தா எதுவுமே இல்லாம, ரொம்ப பணிவா அந்த ரோல் பத்தி பேசினதுதான் இப்போ பலரோட மனசைத் தொட்டிருக்கு. ஒரு நடிகரா மட்டும் இல்லாம, அந்த கதாபாத்திரத்தோட உண்மையான உணர்வ புரிஞ்சு அவர் பேசுறது நிஜமாவே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அந்த ஒரு Shot… ரசிகர்கள் நெகிழ்ச்சி
இந்த ஸ்பெஷல் ஸ்கிரீனிங் பார்த்த சில ரசிகர்கள் அவங்களோட அனுபவத்தை நெகிழ்ச்சியா பேசிட்டு வராங்க. அதுலயும் குறிப்பா ஒரு சீன பத்தி எல்லாரும் பேசுறாங்க. அது, படகுல ராமர் உட்கார்ந்து இருக்கும்போது யாரோ அவர் பேரைச் சொல்லி கூப்பிடுறாங்க, அப்போ அவர் மெதுவா திரும்பிப் பார்க்குராரு, அந்த ஒரு ஷாட் இருக்கே… நிஜமாவே பார்க்கிறப்போ கண்ணுல தண்ணியே வந்துடுச்சுன்னு ஒரு ரசிகர் அவரோட X தளத்துல பதிவிட்டுருக்கார். அந்த சீன்ல அவரோட பார்வையில் ஒரு அமைதியும், கருணையும் அவ்வளவு அழகா தெரிஞ்சதா பலர் சொல்றாங்க. ரன்பீர் இதுக்காக ரொம்பவே மெனக்கெட்டு இருக்கார்ங்கிறது இதுல இருந்தே நமக்கு தெரியுது.
AR Rahman மேஜிக்
இந்தப் படத்துக்கு நம்ம ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தான் மியூசிக். கூடவே ஹாலிவுட்டோட லெஜெண்ட் ஹான்ஸ் ஜிம்மரும் சேருறதால மியூசிக் வேற லெவல்ல இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. லாஸ் ஏஞ்சல்ஸ்ல பார்த்தவங்க சொன்ன இன்னொரு விஷயம், அந்த பின்னணி இசை நம்மள அப்படியே ராமர் காலத்துக்கே கூட்டிட்டுப் போகுதாம். ஒரு பக்கம் பிரம்மாண்டமான கிராபிக்ஸ், இன்னொரு பக்கம் மனசை உருக்குற இசைன்னு ஒரு கம்ப்ளீட் பேக்கேஜா இந்தப் படம் வரும்னு தெரியுது.
ஏப்ரல் 2-க்காக ஒரு வெயிட்டிங்
இந்த வீடியோ வைரல் ஆன உடனே நம்ம ஊரு ஃபேன்ஸ் கொஞ்சம் அப்செட் ஆயிட்டாங்க. என்னப்பா முதல்ல வெளிநாட்டுல இருக்கிறவங்களுக்குக் காட்டுறீங்க, எங்களுக்கு எப்போ காமிப்பீங்கன்னு செல்லமா கோவிச்சுக்கவே ஆரம்பிச்சுட்டாங்க. அப்படிப்பட்ட ரசிகரா நீங்களும்… அப்படினா கவலைப்படாதீங்க, நாளைக்கு (ஏப்ரல் 2-ம் தேதி) ஹனுமன் ஜெயந்தி அன்னைக்கு இந்தியாவுல இந்த Glimpseஐ பிரம்மாண்டமா ரிலீஸ் பண்ணப் போறாங்களாம். சாய் பல்லவியை சீதையாவும், கே.ஜி.எஃப் யஷ்ஷை ராவணனாவும் திரையில பார்க்கிறதுக்கு இப்போவே செம hype எகிரிட்டு இருக்கு. நிதேஷ் திவாரி இயக்கத்துல வர்ற இந்த பிரம்மாண்டமான படம் 2026 தீபாவளிக்கு தியேட்டருக்கு வருது. அதுவரைக்கும் இந்த மாதிரி வர்ற சின்ன சின்ன வீடியோக்களை வச்சுதான் நாம திருப்திப்பட்டுக்கணும்.
