ADVERTISEMENT

‘ஜெயிலர் 2’ ரிலீஸ் எப்போது? சூப்பர் அப்டேட் தந்த ரஜினி

Published On:

| By Pandeeswari Gurusamy

Rajinikanth announces Jailer 2 release date

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி வெளியாகும் என ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் கோவை அடுத்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் அடங்கிய படக்குழுவினர் விமானம் மூலம் கோவை வந்தடைந்து பாலக்காடு சென்றனர்.

குறிப்பிட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்ததை அடுத்து இன்று (செப்டம்பர் 24) இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினர்.

ADVERTISEMENT

அதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகர் ரஜினியை அங்கிருந்த ரசிகர்கள் ‘தலைவா’ என்று கூறி அழைத்து வரவேற்றனர்.

இதையடுத்து சென்னை சென்ற ரஜினி காந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share