ரோபோ சங்கர் உடல்நல பாதிப்புக்கு இப்படியும் ஒரு காரணமா! – உண்மையை உடைத்த இளவரசு

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Sep 2025, 1:14 PM

reason for the health problems of Robo Shankar

நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு மதுப்பழக்கம் காரணம் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் உடலில் சில்வர் பெயிண்ட் அடித்ததும் உடல் நல பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ரோபோ சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பின் உடல் நலம் பெற்று மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை சென்னை துரைப்பாக்கத்தில் காட்ஜில்லா பட பிடிப்பு தளத்தில் இருந்த போது உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு காலமானார்.

நடிகர் ரோபோ சங்கர் மறைவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, சத்தியராஜ், பரத் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஒளிப்பதிவாளர் மற்றும் குணச்சித்திர நடிகருமான இளவரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் மரணமடைந்தால் அது மதுவின் அடிப்படையில் வந்திருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஆனால் ரோபோ சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் ரோபோவாக சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு ஸ்டேஜ் ஷோக்களில் நடிப்பார். ஒரு ஷோவில் நடித்தால் 300 ரூபாய் கிடைக்கும். ஷோ முடிந்து வீட்டுக்கு வந்த பின் அவரது மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி அந்த சில்வர் பெயிண்ட்டை துடைப்பார்.

ADVERTISEMENT

இப்படி தொடர்ச்சியாக மண்ணெணெய் பயன்படுத்தி துடைத்ததால் இளமையிலேயே அவரது தோல் வலுவிழந்துள்ளது. இந்த காரணத்தால் அவருக்கு இளம் வயதிலேயே ஒரு முறை மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்தது. அது வயது கூட கூட உரிய கவனிப்பு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உடலை பற்றி யாராவது கவலைபட்டால் தானே..

இந்த மாதிரி கெமிக்கல் அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள் உடலை பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும். 46 வயது என்பது மரணம் அடையும் வயது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel