ADVERTISEMENT

கூலி படத்திற்கு குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு – பெற்றோர்கள் வாக்குவாதம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Children denied entry to the film coolie

கோவையில் உள்ள ப்ரோஜோன் மாலில் inox திரையரங்கில் கூலி படத்திற்கு குழந்தைகளை அனுமதிக்க மறுத்தால் படம் பார்க்க வந்தவர்களுக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த கூலி திரைப்படம் நேற்று (ஆகஸ்ட்-14) உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, கூலி உலகளவில் முதல் நாளில் ரூ.151 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 15) கோவையில் உள்ள ப்ரோஜோன் மாலில் inox திரையரங்கில் கூலி திரைப்படத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கூலி படத்திற்கு ஏ சர்டிபிகேட் படம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் , book my show செயலி மூலம் டிக்கெட் எடுத்து குழந்தைகளை அழைத்து வந்தவர்களை அங்கிருந்த தியேட்டர் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.

ADVERTISEMENT

குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்றால் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு பெற்றோர்கள் கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என தெரிவித்து வரும் நிர்வாகம், டிக்கெட் புக் செய்த book my show செயலியில் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share