CSK vs RR : நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Published On:

| By christopher

rajasthan royals get their first win in 2025 ipl

IPL 2025 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. rajasthan royals get their first win in 2025 ipl

குவஹாத்தியில் ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று (மார்ச் 30) இரவு எதிர்கொண்டது.

ADVERTISEMENT

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் குவித்தார். சென்னை அணி தரப்பில் மதீஷா பதிரானா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய அணியின் தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா டக் அவுட் ஆனார். அதன்பின்னர் கேப்டன் ருத்துராஜ் ஒரு பக்கம் பொறுமையாக ஆடி ரன் குவித்தாலும், மறுமுனையில் தூபே(18), விஜய் சங்கர் (9) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.

இந்த நிலையில் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்த ருத்துராஜும் 63 ரன்களில் ஹசிரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து வந்த தோனியும் 16 ரன்களில் சந்தீப் சர்மா பவுலிங்கில் வெளியேற, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நடப்பு தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share