போரை முடிவுக்குக் கொண்டு வர புதின் விருப்பம்!

Published On:

| By Jegadeesh

மேற்கத்திய நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் ரஷ்யா படையெடுத்தது. இதில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து போரானது இரு நாடுகளுக்கும் இடையே நிற்காமல் நீடித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 15-வது உச்சி மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

 

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி லாவ்ரவ் கலந்து கொண்டார். எனினும், காணொலி காட்சி வழியே பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அதிபர் புதின் பேசும்போது, உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போரை பற்றி குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

அப்போது அவர், மேற்கத்திய நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வரவே ரஷ்யா விரும்புவதாகவும் மேலும் மேற்கு நாடுகளின் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை

வேலைவாய்ப்பு : UIIC-வில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share