எப்போ வெயிலடிக்கும்…. எப்போ மழையடிக்கும் என்றே யூகிக்க முடியாதபடி மாறியிருக்கிறது தமிழ்நாடு. வெயிலோ, மழையோ… எதற்கும் பொருந்தக்கூடியது சத்தான இந்த கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை.
என்ன தேவை?
கேழ்வரகு சேமியா – ஒரு கப்
கொள்ளு மாவு – அரை கப்
கடலைப்பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு (நறுக்கியது)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (நறுக்கியது)
எண்ணெய் – பொரிப்பதற்கு
எப்படிச் செய்வது?
கேழ்வரகு சேமியாவை மூன்று நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கொள்ளுவை வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். ஊறிய முழுப் பருப்பை ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், அரைத்த கடலை மாவுடன் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொள்ளு மாவு ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் விட்டு வடை மாவுப் பதத்துக்குக் கலந்து கேழ்வரகு சேமியாவைச் சேர்த்து வடையாகத் தட்டி, வாணலியில் எண்ணெய்விட்டு வடையைப் போட்டு முறுகலாகப் பொன்நிறத்துடன் வறுத்து எடுக்க, சுவையான கேழ்வரகு சேமியா – கொள்ளு வடை ரெடி.
நிலவில் தடம் பதித்த இந்தியா: சந்திரயான் 3 டைம்லைன்!
நிலவில் தரையிறங்கியது எங்கே?: புகைப்படம் அனுப்பிய லேண்டர்!