வங்கித் துறையில் பெரிய அளவிலான ஆட்சேர்ப்பு
பஞ்சாப் & சிந்த் வங்கி (Punjab and Sind Bank), 2026ஆம் ஆண்டிற்கான லோகல் பேங்க் ஆபிசர் (LBO) பணியிடங்களுக்கான பெரிய அளவிலான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 1000 காலியிடங்கள் (Vacancies) நிரப்பப்பட உள்ளன.
இந்த ஆட்சேர்ப்பு இந்தியாவின் பல மாநிலங்களில் வங்கியின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 31, 2026 முதல் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 20, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெறும் என்பதால், தகுதியானவர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், பொதுவாக 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும், வங்கித் துறையில் பணியாற்றும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கட்டங்களின் மூலம் தேர்வு செய்யப்படுவர்:
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
- உள்ளூர் மொழித் திறன் பரிசோதனை
இறுதி தரவரிசை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.
பணி விவரங்கள்
இந்த பணியிடம் ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல்-1 பிரிவில் அடங்குகிறது. ஆரம்ப சம்பள அளவு சுமார் ரூ.48,480 முதல் தொடங்கி, அனுபவத்தின் அடிப்படையில் அதிகரிக்கும் வங்கியின் பிராந்திய சேவைகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டியிருக்கும்.
இந்த பணியிடம், பிராந்திய அளவில் வங்கித் சேவையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. பஞ்சாப் & சிந்த் வங்கி வெளியிட்டுள்ள இந்த 1000 லோகல் பேங்க் ஆபிசர் வேலைவாய்ப்பு, பட்டதாரிகளுக்கு வங்கித் துறையில் நுழைய ஒரு முக்கிய வாய்ப்பாகும். குறிப்பாக அரசு வங்கி வேலை நோக்கி தயாராகும் இளைஞர்கள், இந்த ஆட்சேர்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
