தேர்தல் வேலைபளுவுக்கு மத்தியில் பிரதமர் மோடி இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மைய குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பியூஸ் கோயல், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை என 18க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் மோடி இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தை தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது இருவரும் இசை, வாசிப்பு ஆகியவை குறித்து சுவாரஸ்யமாக பேசிக்கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோவை மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே சென்னையில் ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் ரமேஷ் , இந்திய இசையைப் பிரபலப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தான் உருவாக்கி வரும் கமகா பாக்ஸ் இசைக்குறியீடு முறையின் சிறப்பம்சங்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். இந்திய இசையை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல இது ஒரு புதுமையான முயற்சியாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
