ஈஷாவில் பேச்சுவார்த்தையா? திமுக அரசின் இடைக்கால பட்ஜெட்.. பிரேமலதா சொன்னது என்ன?

Published On:

| By Mathi

Premalatha

தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: ஈஷா மையத்துல இருந்ததால அங்க டிவி கிடையாது, எல்லாரும் அமைதியைக் கடைபிடிக்கணும். அதனால பட்ஜெட் பத்தி முழுசா இன்னும் பார்க்கல. ஆனா வெளிய வரும்போது யூடியூப்ல பார்த்தேன், ‘முத்தான 30 அறிவிப்புகள்’ அப்படின்னு சொல்லியிருக்காங்க. தேர்தலுக்கு இன்னும் மூணு மாசம் தான் இருக்கு, அதனால இதையெல்லாம் இப்போவே உடனே அமல்படுத்த முடியுமா, இல்ல தேர்தல் முடிஞ்சு வர்ற அரசு தான் செய்ய முடியுமாங்கிற கேள்வி இருக்கு.

ADVERTISEMENT

தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நடக்குற ஒரு பட்ஜெட்டா இது இருக்கணும், அதைச் செயல்படுத்துற அரசாவும் இது இருக்கணும்.

ஏற்கனவே பல பிரஸ் மீட்ல சொன்னதுதான், ஆட்சியில பங்கு கிடைச்சா அது நல்லதுதான். அது தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல மாற்றமா இருக்கும். ஆனா மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, அதனால ரிசல்ட் வரட்டும், அப்படி ஒரு சூழல் வருதான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

ADVERTISEMENT

ஈஷா யோகா மையத்துல மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், எல். முருகன், என் பக்கத்துல இருந்த வேலுமணி, பாண்டிச்சேரி அமைச்சர்கள்னு எல்லாரையும் பார்த்தேன். ஒரு மரியாதை நிமித்தமா அவங்க என்கிட்ட பேசினாங்க, நானும் அவங்ககிட்ட பேசினேன்.

பிரதமர் மோடி அடிக்கடி வர்றது பத்தி விமர்சனம் இருந்தாலும், அவர் வர்றது நல்லதுதான். அதனால தமிழ்நாட்டுக்கு நல்லது நடந்தா அதை நாங்க வரவேற்போம். இப்போதைக்கு பீ கூல், நோ டென்ஷன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share