Poco C61:
ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான போகோ, இந்தியாவில் மீண்டும் ஒரு பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
போகோ சி51 ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்சனாக அறிமுகமாகியுள்ள இந்த போகோ சி61, கடந்த மாதம் அறிமுகமான ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் ரீ-பிராண்டெட் வேர்சனாகவே காட்சியளிக்கிறது.
போகோ சி61 விலை என்ன?
போகோ சி61 ஸ்மார்ட்போன் 2 வகைகளில் அறிமுகமாகியுள்ளது.
அதில் 4GB ரேம் + 64GB சேமிப்பு கொண்ட வகை ரூ.7,499 என்ற விலையிலும், 6GB ரேம் + 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.8,499 என்ற விலையிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் பச்சை என 3 வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது.
போகோ சி61 ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் மார்ச் 28 அன்று மதியம் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் தளத்தில் தொடங்கவுள்ளது.
விற்பனை தொடங்கும் முதல் நாளில், இந்த ஸ்மார்ட்போனை பெறுவோருக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
போகோ சி61 சிறப்பம்சங்கள் என்ன?
ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மென்பொருள் கொண்டு இயங்கும் இந்த போகோ சி61 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G36 SoC சிப்செட் பொறுத்தப்பட்டுள்ளது.
6.71-இன்ச் HD+ (1,650 x 720 pixels) LCD திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 180Hz டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட திரை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8 மெகாபிக்ஸல் முதன்மை கேமராவும், முன்புறத்தில் செல்ஃபிக்களுக்காக 5 மெகாபிக்ஸல் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh அளவிலான பிரம்மாண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 10W வையர்டு சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.
ஆனால், 2 சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஒரு 4ஜி ஸ்மார்ட்போனாகவே அறிமுகமாகியுள்ளது.
மேலும், ப்ளூடூத் 5.4, USB டைப்-C சார்ஜிங், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட அம்சங்களும், இந்த ஃபோனில் இடம்பெற்றுள்ளது.
மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பானை சின்னம் கேட்டு விசிக மனு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!