சாம்சங் கேலக்சி F15, ரியல்மி 12, ரெட்மி நோட் 13 மற்றும் அண்மையில் அறிமுகமான iQOO Z9 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக, பட்ஜெட் விலையில் தனது புதிய ‘Poco X6 Neo’ ஸ்மார்ட்போனை போகோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. poco x6 neo smartphone
மீடியாடெக் டைமென்சிட்டி 6080 SoC ப்ராசஸருடன் அறிமுகமாகியுள்ள இந்த போகோ X6 Neo ஸ்மார்ட்போன், MIUI 14 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 13 அமைப்பு கொண்டு இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 2 நானோ சிம்களை பொருத்திக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளது.
6.67-இன்ச் (1,080×2,400 பிக்சல்கள்) AMOLED திரை, 120Hz திரை புதுப்பிப்பு விகிதம், 93.30% திரை-உடல் வீதம், 1,000 நிட்ஸ் ஒளிரும் திறன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு என சிறப்பான திரை அம்சங்களையும் இந்த போகோ X6 Neo ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 108 மெகாபிக்சல் அளவிலான பிரம்மாண்ட கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா என 2 பின்புற கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், முன்புறத்தில் செல்ஃபிக்களுக்காக 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், 5000 mAh என்ற மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ள இந்த போகோ X6 Neo, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது.
5G வசதி, ப்ளூடூத் 5.3, USB டைப்-C சார்ஜிங் போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட அம்சங்களுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் 2 வகைகளில் அறிமுகமாகியுள்ள போகோ X6 Neo ஸ்மார்ட்போன், 8GB ரேம் + 128GB சேமிப்பு வகை ரூ.15,999 என்ற விலையிலும், 12GB ரேம் + 256GB சேமிப்பு வகை ரூ.17,999 என்ற விலையிலும் விற்பனையாக உள்ளது. poco x6 neo smartphone
இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் ஆரஞ்சு என 3 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் மார்ச் 18 அன்று விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனை,
ஐசிஐசிஐ, ஆக்சிஸ், எச்.டி.எஃப்.சி மற்றும் எஸ்.பி.ஐ ஆகிய வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி பெறும்போது, ரூ.1,000 தள்ளுபடி பெறலாம்.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு!
GOAT: செண்டிமெண்டாக இணைந்த முன்னணி நடிகை!