Pension of RS.3000 per month for farmers above 60 years of age - PMK Election Manifesto

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக தேர்தல் அறிக்கை!

அரசியல்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என இன்று (மார்ச் 27) வெளியிடப்பட்ட பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.

பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:

  • நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
  • சென்னையில் உச்சநீதிமன்ற கிளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
  • அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இடஒதுக்கீடு வழங்கப்படும்
  • தனியார் துறை, நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும்
  • மாநில தன்னாட்சி அதிகாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்
  • 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
  • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்
  • கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.
  • மத்திய அரசிற்கு கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கை மாநிலங்களுக்கு கொடுக்க பாமக பாடுபடும்.
  • என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 21 வயதுக்கு கீழ் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்.
  • ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லாமல் செய்யப்படும்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னையில் என்ஐஏ சோதனை!

மதுபோதையில் ஆசிரியர்… விரட்டியடித்த மாணவர்கள்: வைரலாகும் வீடியோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *