பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணியின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அக்கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை பாமகவின் தலைவராக அன்புமணியே நீடிப்பார் என பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமகவின் பொதுக் குழு கூட்டம் இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடைபெற்ற இந்தப் பொதுக் குழுவில்
- பாமக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடியும் வரை அன்புமணியே கட்சியின் தலைவராக நீடிப்பார்
- பாமக தலைவராக 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணியே தொடருவார்
- பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமாவின் பதவிக் காலமும் ஓராண்டு நீட்டிப்பு
- சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும
- சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாமக உட்கட்சி தேர்தலை நடத்த ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது
- அன்புமணியின் செயல்பாட்டில் பாமக முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளது
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
