பிரச்சாரத்தை தொடங்கிய ராமதாஸ் மேடையிலேயே மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி

Published On:

| By Pandeeswari Gurusamy

ramadoss

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஏப்ரல் 12) சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் – மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்சி இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து வருகிறார். அதேசமயம், பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க.வுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறார்.

ADVERTISEMENT

இன்று சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ராமதாஸின் தீவிர ஆதரவாளரான அருளுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசி, அருளுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். பின்னர், பிரச்சார மேடையிலிருந்து கீழே இறங்கியபோது திடீரென ராமதாஸ் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் அவரைத் தாங்கிப் பிடித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ராமதாஸுடன் அவரது மகள் ஸ்ரீகாந்தி மற்றும் வேட்பாளர் அருள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

ஏற்கெனவே அரசியல் அழுத்தங்கள் மற்றும் தனிப்பட்ட குடும்ப விவகாரங்களால் கடும் மன அழுத்தத்தில் இருந்த ராமதாஸ், தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனைதொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இல்லாத நிலையில், இன்று பிற்பகல் அன்புமணி ராமதாஸ் தனது தாயார் சரஸ்வதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பாமக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share