தமிழ் மொழியை பாதுகாக்க- இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட அடுத்த தலைமுறைக்கு கடந்த கால வரலாறுகளை முன்வைத்து ’அரசியல் வரலாறு’ பாடம் நடத்தியிருக்கும் பராசக்தி திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
சமூக வலைதளங்களில் பதிவான கருத்துகள்:
விடுதலை இராசேந்திரன்: இந்தித் திணிப்பு எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்வதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது பராசக்தி. இன்று கேன்பரே நகரில் படத்தைப் பார்த்தபோது பொதுநிலையில் உள்ளவர்கள் அனைவரும் படத்தை பாராட்டினார்கள். இது படத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி.
படத்தின் இறுதியில் இரு மொழிக் கொள்கையை அண்ணா அறிவிக்கும் காட்சி உணர்ச்சிமயமானது படத்தின் திசை வழியை தெளிவாக உணர்த்திவிட்டது.
தெலுங்கைதாய் மொழியாக் கொண்ட கதாநாயகி இந்திக்கு எதிராக தாய்மொழியின் தேவையைப் பேசுவதோடு போராட்டக் களத்திலும் நிற்கிறார். சௌராஷ்ட்ரா மொழி பேசும் இளைஞர் இந்திக்காக உயிர் துறக்கிறார்.
திராவிடர் இயக்கம் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மேற்கு வங்கத்திலும் தீயாகப் பற்றியதை படம் உணர்வோடு பேசுகிறது.
மும்மொழித் திட்டம், நவோதயா பள்ளி என்று தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைக்கும் சங்கிகள் இனிவாய் திறக்க முடியாத சம்மட்டி அடியை கொடுத்திருக்கிறது பராசக்தி.
காலத்திற்குத் தேவையான ஒரு அரசியல் கருத்தை மிகச் சிறந்த திரைமொழியில் உணர்வுகளோடுமக்கள் முன் சமர்ப்பித்த படக்குழுவினரை மனதாரப் பாராட்ட வேண்டும்.
பேராசிரியர் ராஜன்குறை(டெல்லி): பராசக்தி 2026! படம் அருமை! தமிழுக்குப் பெருமை! நான் வழக்கமாகப் பார்க்கும் டில்லி நொய்டா சிடி செண்டர் பி.வி.ஆரில் சனிக்கிழமை மாலை 7.40 மணிக் காட்சியாக (முதல் நாள் ஓரு காட்சிதான் திரையடப்பட்டது) பராசக்தி பார்த்தேன். கிட்டத்தட்ட அரங்கு நிரம்பிய காட்சி.
உணர்வூபூர்வமான அனுபவம். பொருத்தமான வசனங்களுக்கு அரங்கில் ஆரவாரம் வெளிப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது. ரசித்துப் பார்க்கும்படியான படமாக இருந்ததால் குடும்பமாக குதூகலமாகப் பார்த்தார்கள்.
வெகுஜன சினிமாவின் கதையாடல் அம்சங்கள் எல்லாம் நிறைந்திருந்தாலும், 1965 போராட்டத்தின் தீவிரம், அதன் உணர்வு நிலை சிறப்பாகவே வெளிப்பட்டிருந்தது திரைக்கதையின் வெற்றி, திரையாக்கத்தின் வெற்றி.
நுட்பமான அரசியல் கருத்துக்கள் அருமையாக வெளிப்பட்டுள்ளன. இந்தி போராட்டம் ஏன் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு சிறப்பாகக் கடத்தி விடும். சென்சார் வெட்டுக்களால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தை நிறுத்தும் அற்ப முயற்சிதான்.
வரலாற்றை சுதந்திரமான கற்பனை கலந்த வெகுஜன கதையாடலாக மாற்ற அறுபதாண்டுகால அவகாசம் தேவைப்படுகிறது என்றுதான் நினைக்கிறேன். வரலாறு கதையாடலாகும்; கதையாடல் வரலாறாகும் என்பதுதான் சுழற்சி என்பதால் இது பொருத்தமான நேரத்தில் வெளிவந்திருப்பது பெரும் சிறப்பு.
தி.மு.க வரலாற்றில் இன்னும் பல தருணங்கள் இதேபோல கதையாடலாகும் சாத்தியத்துடனேயே உள்ளன. இந்த படம் அதற்கெல்லாம் ஒரு துவக்கமாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் யதார்த்தமான சித்தரிப்புகளும்கூட இது போன்ற கதையாடல்கள் ஏற்படுத்தும் வெகுஜன மனோநிலையில் சாத்தியமாகும்.
இன்பன் உதயநிதி, சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவுக்கான மெட்டீரியலாகத்தான் இருக்கிறார்! அதர்வாவிற்கும் மிக முக்கியமான படம்! ஸ்ரீலீலாவுக்கும் தமிழில் நல்ல எதிர்காலம் இருக்கும் என நினைக்கிறேன்.
பொங்கல் சிறப்பான தமிழ் பொங்கலாக அமைய இந்த படத்தை அனைவரும் சென்று பார்க்கலாம். தமிழ் வெல்லட்டும்!
@suryaxavier1: ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம் பராசக்தி.
25-01-1965 முதல் 12-02-1965 வரை 18 நாள் பற்றி எரிந்த மொழிப்போர் எனும் உள்நாட்டுப்போராக தமழ்நாட்டில் வெடித்தது.
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் தமிழ் மொழி காக்கும் போராட்டம் மூன்று கட்டங்களாக தமிழ்நாட்டில் நடைபெற்றிருந்தாலும், 1965 ல் நடைபெற்ற போராட்டம் தான் உலக அளவில் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
சென்னையில் சிவலிங்கம், ரங்கநாதன் ஆகிய இருவர் தீக்குளித்த சம்பவத்தை, அப்போது நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.சபையில் பாகிஸ்தான் பிரதிநிதி அம்ஜத் அலி குறிப்பிட்டுப் பேசுமளவுக்கு போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்திருந்தது.
18 நாள் போராட்டத்தில் 63 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர்.
குமாரபாளையம்-15
பொள்ளாச்சி-10
பாண்டிச்சேரி-10
கோவை-4
திருச்செங்கோடு-4
திருப்பூர்-4
கரூர்-3
பேரணாம்பட்டு-3
ஜோலார்பேட்டை-3
திருச்சி-2
திருவொற்றியூர்-2
சென்னை-1
ஆற்காடு-1
சென்னிமலை-1
வெள்ளக்கோவில்-1
இதில் முக்கியமான செய்தி யாதெனில், கொங்குப்பகுதியைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்பே அதிகம்.
1965 பிப்ரவரி 17 “ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்” என்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் அறிவிக்க, பிரதமர் சாஸ்திரி உறுதி செய்ய போராட்டம் முடிவுக்கு வந்தது.
மொழி காப்பதற்கானப் போராட்டத்தில் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியது உலகில் வேறெங்கும் இல்லை.
மொழி காக்க உயிர்நீத்தப் போராளிகளுக்கு வீர வணக்கம்.
பற்ற வைத்த பராசக்தீ பரவட்டும். டெல்லி ஆதிக்கம் ஒழியட்டும். வாழ்க தமிழ்.. ! வெல்க தமிழன்..!
@paramporul: ‘பராசக்தி’ ங்கற டைட்டில குடுக்க சம்மதித்ததற்காக திமுக தலைமை மீது கடும் அப்செட்டாகி விமர்சிச்ச பலரில் நானும் ஒருத்தன்.
ஆனா இதைவிட பொருத்தமான படம் எதுவுமே இருக்க முடியாது. காலத்தால் அழியாத, அழிக்க முடியாத அந்த டைட்டிலுக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்கு இந்தப்படம்.
விஜயபாரதி: படத்தோட முதல் 1 நிமிசம் மொழியால் உடைந்த தேசங்கள் பற்றியும் அதோட continuityயா தமிழ் மொழி போராட்டத்துக்கு ஒரு இன்ட்ரோ இருக்கு… அந்த 1 நிமிசம் போதும்டா.. இன்னும் 100 வருசத்துக்கு படம் நின்னு பேசும் ரியல் தெறி
RJ Rohini: பராசக்தி சொல்ல வரும் அரசியலை அடுத்த தலைமுறை புரிந்து கொள்ள உதவ வேண்டியது நம் கடமை. படம் பார்க்க வந்தோமா 4 சண்டைக்காட்சி , 4 பாட்டு , அதிரடி வசனம் இந்த பாணி படங்கள் மட்டுமே பார்த்து பரவசம் அடைபவர்களுக்கு நிச்சயம் பராசக்தியின் மதிப்பு தெரியாது. அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய பாடம் பராசக்தி. சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் கும்பல்கள் அவர் வளர்ச்சியை பொறுக்க முடியாத வன்மமாக தான் பார்க்கிறேன். பராசக்தி – வெல்க தமிழ் வாழ்க தமிழ். தமிழ் தீ பரவும்
@saranya121289: ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசும் மூளையும் shake ஆகிற மாதிரி ஒரு தரமான அனுபவம். இது ஒரு படம் மட்டும் இல்ல… சமூகத்தை உலுக்கிய சிந்தனைப் புரட்சி
அண்ணா scene ல இருந்து climax வரை ஒவ்வொரு dialogue-மும் தீப்பொறி.. ஒவ்வொரு நடிகரும் நடிக்கல…
கதாபாத்திரமா வாழ்ந்தாங்க.. Climax-ல hero oda roaring performance Tamil cinema history ல eternally echo ஆகுற peak moment அதர்வா வோட திரையுலகப் பயணத்தை தொடங்கிய முதல் ஒளி பராசக்தி
