இன்னைக்கு வொர்க் முடிச்சிட்டு நேரா வீட்டுக்கு போகாமல், பொங்கலுக்கு அழைக்கறதுக்காக சித்தி வீட்டுக்கு போயிருந்தேன்.
அங்கு சித்தப்பாக்கிட்ட தம்பிகள் சண்டை போட்டுகிட்டு இருந்தானுங்க. எனக்கு ’பிரிச்சி கொடுத்துருங்க’னு ஒரே சத்தம் ரோடு வரைக்கும் கேட்டுச்சு.
அந்த சமயத்துல உள்ள போன நான், என்ன சித்தி சொத்த பிரிச்சு கொடுங்கனு கேக்குறானுங்களானு கேட்டேன்…
அட இல்லப்பா… பொங்கல் காச பிரிச்சு குடுங்கனு கேட்டு சண்ட போடுறானுங்கனு சொன்னாங்க…
அடபாவிங்களா…
சரி, சரி சண்ட போடாதிங்கனு சமாதானம் படுத்திட்டு பொங்கலுக்கு வீட்டுக்கு வாங்கனு அழைச்சிட்டு வந்துட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
இதுக்கு அவன

Sasikumar J
~ டிக்கெட் கிடைக்கல மாமா…!
~ பராசக்திக்கா, ஜனநாயகனுக்கா…!!
~ பொங்கல்க்கு ஊருக்கு போறதுக்கு ட்ரெயின் டிக்கெட் மாமா…!!!

balebalu
தை பிறந்தால் வழி பிறக்கும்
முன்பு – விவசாயிகளின் மொழி
இப்போ – அரசியல்வாதிகளின் மொழி

டிங் டாங்
விலை மதிக்க முடியாத
நமது நேரத்தை
கொல்வது
“நோட்டிபிகேஷன்” தான்

mohanram.ko
மருத்துவமனையில் எழுத வேண்டிய ‘பிரசவத்துக்கு இலவசம்’ …..ஆட்டோவில் எழுதி இருக்கு….
ச ப் பா ணி
மெளன விரதத்தில்
மொபைல் போன்
“silent mode”!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
காரண காரியம் இன்றி இங்கு எதுவும் நடப்பதில்லை காஷ்மோரா..
காசு பணம் சார்ந்த தேவையின்றி இங்கு யாரும் யாருக்கும் போன் செய்வதில்லை ‘காசு’மோரா..

படிக்காதவன்
வானிலை அறிக்கை சொல்றவங்க சொன்னமாதிரி கூட எப்பவாவது
மழை பெய்து வெயில் அடிக்குது ஆனால் இந்த ஜோசியக்காரங்க சொன்னமாதிரி நல்லது மட்டும் எப்பவும் நடக்க மாட்டேங்குது…

Writer SJB
நம்ம காதல் ஏன் இன்னும் உயிரோட இருக்கு தெரியுமா?
தெரியும்,,
ஏன் சொல்லு?
ஏன்னா நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கல..!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன்னே நாதஸை அறைஞ்சீங்க..?
பின்ன என்னப்பா.. ‘ஜன’நாயகன் ஜனவரில ரிலீஸ் ஆகாம பிப்ரவரில ரிலீஸ் ஆச்சுன்னா, ‘Febநாயகன்’னு பேர் மாத்திருவாங்களான்னு கேட்கறாம்ப்பா..

லாக் ஆஃப்
