பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கார்த்தி மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது.
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நேரடிப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. பராசக்தி திரைப்படம் இன்று (ஜனவரி 10) வெளியாகி கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் வெளியீடாக முன்னணி நடிகர்களின் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வா வாத்தியார்’ படம் பொங்கல் ரிலீசாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

அதுபோன்று அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியிருக்கும் நடிகர் ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வருகிற 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 15ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
