தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
பரமக்குடி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

பரமக்குடி தனி தொகுதி.. இங்க 2021-ல் திமுகவின் முருகேசன் ஜெயிச்சாரு.. இந்த முறை கேகே கதிரவன் திமுக கேண்டிட்டா நிற்கிறாரு.. இவர் போகலூர் ஊராட்சி ஒன்றிய செயலாளர்.
அதிமுகவில எஸ் முத்தையா போட்டியிடுகிறார். 2016-ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர். பின்னர் டிடிவி தினகரன் அணிக்கு போயி பதவியை இழந்தார்.
2021-ல் அமமுக வேட்பாளரா போட்டியிட்டு 3-வது இடத்துக்கு போனார். இந்த முறை அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார்.
இந்த தொகுதியில புதிய தமிழகம் கட்சிக்கும் கணிசமான செல்வாக்கு இருக்குது.
தவெக சார்பில் கோபிநாதன, நாதக சார்பில் எழில் இளவரசி ஆகியோர் களம் காண்கின்றனர்
நமது சர்வே முடிவுபடி,
திமுக -40 %
அதிமுக கூட்டணி -37%
தவெக-13%
நாதக-9% வாக்குகள் பெறும்
திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளர் கதிரவன் வெல்ல வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
