ரா உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்!

Published On:

| By Kavi

new RAW chief

ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். Parag Jain appointed as RAW intelligence agency

இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹா வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

ADVERTISEMENT

இதனால் புதிய தலைவரை நியமிப்பதற்கு ஆலோசித்து வந்த மத்திய அரசு பராக் ஜெயினை புதிய தலைவராக அறிவித்துள்ளது.

ஜெயின் 1989 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது விமான ஆராய்ச்சி மையத்தின் (ARC) தலைவராக உள்ளார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களில் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை எளிதாக்கும் உளவு தகவல்களை வழங்கியதன் மூலம், ஆபரேஷன் சிந்தூரில் ARC முக்கிய பங்கு வகித்ததாக அறியப்படுகிறது. அந்தவகையில் பராக் ஜெயின் ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்துக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ADVERTISEMENT

பஞ்சாபில் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோது அவரது பணி குறிப்பிடத்தக்க வகையில் இருந்துள்ளது. அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் எஸ்எஸ்பி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

“பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றியுள்ளார். இலங்கை மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார். கனடாவில் தனது பதவிக் காலத்தில், அங்கிருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை அவர் கண்காணித்ததார்” என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. Parag Jain appointed as RAW intelligence agency

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share