பல்லாவரம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Pallavaram Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 பல்லாவரம் வாக்காளர்கள்

Pallavaram Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Pallavaram Constituency Pre-Poll Survey 2026
Pallavaram Constituency Pre-Poll Survey 2026
Pallavaram Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Pallavaram Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி\

Pallavaram Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Pallavaram Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Pallavaram Constituency Pre-Poll Survey 2026

பல்லாவரம், தோல் தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கும் தொகுதியாகும். கடந்த 2 தேர்தல்களாக பல்லாவரம் தொகுதியில் திமுகவின் இ.கருணாநிதி வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் சிட்லபாக்கம் ராஜேந்திரனை 37,781 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த முறை தமக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த கருணாநிதிக்கு ஏமாற்றம்தான்.

பல்லாவரம் தொகுதி, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் அனகை முருகேசன் இங்கே போட்டியிடுகிறார். இவர், 2011-ல் செங்கல்பட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

அதிமுக கூட்டணியில் ஐஜேகே கட்சியின் வெங்கடேசன், வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் சட்டசபை தேர்தல் களத்துக்கு புதியவர்.

தவெக சார்பில் காமாட்சி, நாதக சார்பில் கார்த்திகேயன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி (தேமுதிக) -41%
அதிமுக கூட்டணி-30%
தவெக-20%
நாதக-7% வாக்குகள் பெறும்

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக நல்ல லீடிங்கில் இருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? ஸ்ரீபெரும்புதூர் | Sriperumbudur | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share