பைக்தான் இருக்குது, காதலி இல்லை… மாற்றி யோசித்த இளைஞர்!

Published On:

| By Kumaresan M

நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலி விளையைச் சேர்ந்தவர் மதன். இளைஞரான இவர், பல இளம் பெண்களை காதலிக்க முயன்றுள்ளார். lovers day celebration

ஆனால், யாரும் மதனின் காதலை ஏற்கவில்லை. மதனை துரத்தியடித்துள்ளனர். இதனால், காதலி கிடைக்காமல் மதன் விரக்தியடைந்துள்ளார். இந்த நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் அவரின் காதல் ஏக்கம் இன்னும் அதிகமாகியுள்ளது. காதலி இல்லாத சோகமும் வாட்டியுள்ளது.

ADVERTISEMENT

என்ன செய்யவென்று யோசித்துள்ளார். இன்று இளைஞர்கள் காதலியுடன் பைக்கில் வலம் வருவார்களே என்கிற ஏக்கமும் அவரிடத்தில் இருந்துள்ளது. ஆனால், அவரிடம் பைக் மட்டும்தான் இருந்தது. காதலி இல்லை. எனினும், சோர்ந்து போகாத மதன் வேறு விதமாக சிந்தித்தார்.

தனக்கு காதல் கைகூடவில்லை , தனக்கு காதலி யாரும் இல்லை என்பதை திசையன்விளை இளம் பெண்களிடம் வித்தியாசமான முறையில் சொல்ல முடிவு செய்தார். தொடர்ந்து, பொம்மை ஒன்றை வாங்கியுள்ளார். காதலர் தினமாக இன்று அந்த பொம்மை காதலியுடன் திசையன்விளை பகுதியில் வலம் வந்தார். இந்த வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ADVERTISEMENT

இப்படியாக மதனின் காதலர் தின கொண்டாட்டம் இனிதே நிறைவேறியது. lovers day celebration

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share