ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் ஆடும், நோரா ஃபதேஹி யார் தெரியுமா?

Published On:

| By Minnambalam Desk

ஜெயிலர் 2 படத்தில் ஒரு பாட்டில் ரஜினியுடன், நோரா ஃபதேஹி நடனம் ஆடுகிறார் என்றால்… யார் அந்த நோரா ஃபதேஹி என்ற கேள்வி வரும் இல்லையா?

பெயர்தான் பலருக்கும் புரியாது . ஆனால் ஆளை நீங்கள் முன்பே பார்த்து இருக்கிறீர்கள்.

ADVERTISEMENT

அடிப்படையில் நோரா ஃபதேஹி, கனடா நாட்டு டான்ஸர். மொராக்கோ நாட்டு அம்மா அப்பாவுக்குப் பிறந்தவர் . எனினும் மனதளவில் நான் ஒரு இந்தியர் என்று சொல்லிக் கொண்டவர்.

போதாதா?

ADVERTISEMENT

Roar: Tigers of the Sundarbans என்ற இந்திப் படத்தில் அறிமுகமானார்.

பாகுபலி முதல் பாகத்தில் வந்த மனோகரி பாடலில் பச்சை உடை அணிந்து ஆடிய, நட்சத்திரத் தூறல் இவர்தான். அதற்கு முன்பே ஜூனியர் என் டி ஆர் நடித்த டெம்பர் படம் மூலமே தெலுங்கில் அறிமுகமாகி விட்டார்,

ADVERTISEMENT

அதைத்தொடர்ந்து டபுள் பேரல், காயன்குளம் கொச்சுண்ணி ஆகிய மலையாளப் படங்கள்.

அடுத்து இந்தி பிக்பாஸ் சீசன் 9 ல் 58 ஆவது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே போனார். 25 நாட்கள் உள்ளே ஆட்டம் போட்டு விட்டு 83 ஆம் நாள் வெளியே வந்தார். அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் நெருலாவுடன் இவர் ஆடிய நடனங்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன.

அப்புறம் சத்யமேவ ஜெயதே உட்பட பல இந்தி படங்கள்.

மேற்கொண்டு ஆங்கிலம் மற்றும் அரபி என்று, பல மொழிப் படங்கள். கழுத, ஆட்டத்துக்கு என்ன மொழி வேண்டிக் கிடக்கு?

தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி என்று மாறி மாறி நடனம் ஆடியவர், பாகுபலி முதல் பாகம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஊபிரி என்ற தெலுங்குப் படம் தோழா என்ற பெயரில் தமிழ் பேசியபோது அந்தப் படத்திலும் இருந்தார்.

உண்மையில் இவரை நேரடித் தமிழ்ப் படத்துக்கு முதலில் கொண்டு வந்தவர் ராகவா லாரன்ஸ் தான். அவர் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தின் (ஏன் சார், இவ்ளோ லேட்?) கதாநாயகி இவர்தான்.

இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் நடனம் ஆடி இருக்கிறார் நோரா ஃபதேஹி

ஆங்கிலப் படங்களில் எல்லாம் ஆடினாலும் ரஜினியுடன் ஆடியதில் அவருக்குப் பெரிய சந்தோஷம். பாடல் காட்சி முடிந்த நிலையில் சோஷியல் மீடியாவில் , “ஷூட்டிங் முடிந்தது. சும்மா பிளாஸ்ட பண்ணோம். உண்மையாகவே அந்த அனுபவம் அற்புதமாக இருந்தது . இப்போதைக்கு முகம் மட்டும்தான் காட்டுவேன். உடையைக் காட்ட முடியாது” என்று சொல்லிப் புளகாங்கிதம் அடைந்து இருக்கிறார்.

ஜெயிலர் படத்தில் ரஜினியோடு, மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி என்ற, பெரிய வி ஐ பி நடிகர்கள் லிஸ்ட்டில் நேரா இணைகிறார் நோரா ஃபதேஹி.

ஜெயிலர்1 இல் தமன்னாவுக்கு நூறு மீட்டர் பின்னால் நின்று ரஜினி ஆடினார்,

நோரா ஃபதேஹிக்கு எத்தனை மீட்டர் பின்னால் நெல்சன் ரஜினியை நிக்க வைப்பாரோ .. தெரியல.

– ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share