நெய்வேலி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ. யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

நெய்வேலி  வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

நெய்வேலி தொகுதியில் திமுக வேட்பாளராக  சபா ராஜேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். 2021 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜெகனை 977 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்ற நிலையில், 2016, 2021 ஆகிய இரு தேர்தல்களிலுமே திமுக வெற்றி பெற்றது. 

2026 தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் சொரத்தூர் ராஜேந்திரன்,  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் வீரமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன் கேமரா சின்னத்தில் போட்டியிடுகிறார். 

இந்த தொகுதியில் 2011 இல் வேல்முருகன் பாமக வேட்பாளராகவும், 2016 இல் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டார். எனினும் வெற்றி பெறவில்லை. 

2026 தேர்தல் களம் இந்த தொகுதியில் கடும் போட்டியில் தான் இருக்கிறது.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக-40%
அதிமுக-36%
தவெக-17%
நாதக-6% வாக்குகள் பெறும்

திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கடலூர் | Cuddalore | Minnambalam Mega Survey Results 2026| Election 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share