பயனர்களுக்கு ஷாக் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ்!

Published On:

| By Jegadeesh

Netflix Ends Password Sharing In India

உலக அளவில் அதிக பயனர்களை கொண்டுள்ள ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ஒரு முக்கிய அறிவிப்பை இன்று (ஜூலை 20) வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மெக்சிகோ, பிரேசில் போன்ற 100 நாடுகளில் பாஸ்வேர்ட்  பகிர்வை கட்டுப்படுத்தியது.

ADVERTISEMENT

இந்நிலையில்,  இந்தியாவில் இனி நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டுகளை பகிர அனுமதிக்கப்படாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ்வேர்டை ஷேர் செய்திருக்கும் பயனர்களுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

அதேபோல் பேஸிக் ப்ளானில் Ad Free அம்சம் புதிய பயனர்களுக்கும், ஏற்கனவே அந்த ப்ளானில் இருந்து விலகி மீண்டும் இணைய விரும்பும் பயனர்களுக்கும் நிறுத்தப்படுகிறது.

தற்போது இருக்கும் சப்ஸ்க்ரைப்பர்களுக்கு மட்டும்தான் அது பொருந்தும். கனடாவில் அந்த முறை செயல்படுத்தவும்பட்டுவிட்டது.

ADVERTISEMENT

அதனையடுத்து அமெரிக்காவிலும் ப்ரிட்டனிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இந்த வருடத்தின் வருவாய் புதிய பயனர்களின் மூலம்தான் அதிகரித்திருக்கிறது.

இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.2 பில்லியன் அமெரிக்க டாலர். இதை இன்னும் அதிகரிக்க  திட்டம் தீட்டியிருக்கிறோம்”என்று கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு தற்போது நெட்ஃபிளிக்ஸ் பயனாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மணிப்பூர் கொடூரம்: முக்கிய குற்றவாளி கைது!

மணிப்பூர் சம்பவம்: எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share