மணிப்பூர் சம்பவம்: எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ்!
மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15 எம்.பி-க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொண்டுவந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் குகி சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, “என் இதயம் வலியாலும் கோபத்தாலும் கனத்திருக்கிறது. மணிப்பூரில் நடந்த நடந்த கொடூர சம்பவம் எந்த நாகரிக சமுதாயத்திற்கு வெட்ககேடாகும். குற்றம் இழைத்தவர்கள் யாரும் தப்ப முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு துவங்கியதும் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்களவை மதியம் 2 மணி வரையிலும் மாநிலங்களைவை மதியம் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 12 மணிக்கு துவங்கியதும் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலளங்கவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் மணிப்பூர் கலவரம் குறித்தும் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று 15 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மணிப்பூர் கொடூரம்: முக்கிய குற்றவாளி கைது!
“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம்” – ரகுபதி