தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
நத்தம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

நத்தம் தொகுதி… இதுவும் கவனிக்கப்படுகிற தொகுதியாகும்.
அதிமுகவின் சீனியர்களில் ஒருவரான நத்தம் விஸ்வநாதனின் தொகுதியாக பார்க்கப்படுகிறது.
2001, 2006, 2011, 2021 என 4 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் நத்தம் விஸ்வநாதன்.
2021 தேர்தலில் 11,932 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் எம்.எ.ஆண்டி அம்பலத்தை தோற்கடித்தார்.
இந்த முறையும் நத்தம் விஸ்வநாதன் களம் காண்கிறார். திமுக கூட்டணியில தமிழர் தேசம் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. முத்தரையர் சங்கத் தலைவர் செல்வக்குமார், திமுக கூட்டணி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் இங்கே போட்டியிடுகிறார்.
தவெக சார்பில் எல்.எல்.ரமேஷ் , நாதக சார்பில் அழகம்மாள் ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக-38%
அதிமுக-40%
தவெக-12%
நாதக-9% வாக்குகள் பெறும்
கடும் போட்டிக்கு மத்தியில் அதிமுக லீடிங்கில் இருக்கிறது. மீண்டும் நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
