நாகப்பட்டினம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

Nagapattinam Constituency Pre-poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

நாகப்பட்டினம் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Nagapattinam Constituency Pre-poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Nagapattinam Constituency Pre-poll Survey 2026
Nagapattinam Constituency Pre-poll Survey 2026
Nagapattinam Constituency Pre-poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Nagapattinam Constituency Pre-poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Nagapattinam Constituency Pre-poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Nagapattinam Constituency Pre-poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Nagapattinam Constituency Pre-poll Survey 2026

நாகையை எடுத்துகிட்டா கடந்த 2021-ல் திமுக கூட்டணியில விசிகவின் ஆளூர் ஷாநவாஸ் போட்டியிட்டு ஜெயிச்சாரு..

இந்த முறை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கு.. மமக தலைவர் ஜவாஹிருல்லா இங்கே உதயசூரியன் சின்னத்துல போட்டியிடுறாரு..

அதிமுக வேட்பாளரா தங்க கதிரவன் நிற்கிறாரு..

2016-ல் மஜக தலைவர் தமீமுன் அன்சாரி இங்கே ஜெயிச்சிருக்காரு..

இந்த தொகுதியில சிபிஎம் வாக்குகள் அதிகமா இருக்கு..

சிபிஎம் மூத்த தலைவர் உமாநாத், வீரய்யன் போன்றவங்க ஜெயிச்ச தொகுதி..

தவெக சார்பில் சுகுமார், நாதக சார்பில் பாத்திமா பர்ஹானா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக கூட்டணி – 38%

அதிமுக கூட்டணி- 33%

தவெக- 18%

நாதக- 10% வாக்குகள் பெறும்

கள நிலவரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? நாகப்பட்டினம் | Nagapattinam | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share