தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
மயிலாப்பூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

மயிலாப்பூர் தொகுதியை பொறுத்தவரை மிக சுவாரஸ்யமான தொகுதி.
1980ல் மயிலை மாங்கொல்லையில வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலைஞர் தாமதமாகத்தான் வந்தார். அப்போது, மாவட்டச் செயலாளர் ஆர்.டி. சீதாபதி திடீரென வந்து, அங்கிருந்த எல்லோரையும் இரு அடி பின்னால் போகச் சொன்னார். மக்கள் எல்லோரும் நகர்ந்த உடன் மீண்டும் இரு அடி முன்னால் வர சொன்னார். பிறகு, ‘நான் ஒரு மாவட்டச் செயலாளர், நான் சொல்வதையே இவ்வளவு தூரம் கேக்குறீங்களே, கலைஞர் வந்து ஒரு வேட்பாளரை சொல்லும் போது அந்த வேட்பாளர் நீங்கள் எல்லாம் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது நாஞ்சில் மனோகரனுக்கும் கபாலிக்கும் தான் போட்டி. பொதுவாக இந்தத் தொகுதியில கபாலி, எஸ்.வி. சேகர், நடராஜ் ஐபிஎஸ் என உள்ளூர் வேட்பாளர்கள்தான் அதிகம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது தமிழிசை சௌந்தரராஜன் நின்னாலும், உள்ளூர் வேட்பாளர் என்ற முறையில் திமுக வேட்பாளரான சிட்டிங் எம்.எல்.ஏ வேலு ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும், தவெக வேட்பாளராக வெங்கட் ரமணன், நாதக வேட்பாளர் அருண் ஆகியோர் களம் காண்கின்றனர்.
இதில் 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் வேலு, அதிமுக வேட்பாளரான நட்ராஜை 12,633 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
நமது சர்வே முடிவுபடி, இந்த தேர்தலில்
திமுக-34%
அதிமுக (பாஜக) -34%
தவெக-23%
நாதக-5% வாக்குகள் பெறும்
மயிலாப்புர் தொகுதியில் வேலுவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் கடும் போட்டி இருக்கும். தற்போது வரை சமநிலை நிலவுகிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
