சிப்பிக்குள் முத்து… அமைச்சர் வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Selvam

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதியுள்ள ‘கலைஞர் எனும் தாய்’ நூலை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 24) வெளியிட்டார்.

‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. திருவாரூர் ஆழித்தேர் அசைந்து வருவது போல, சிப்பிக்குள் முத்தாய் ‘கலைஞர் எனும் தாய்’ நூல் மேடைக்கு எடுத்து வரப்பட்டது.

அந்த சிப்பியை திறந்து புத்தகத்தை ஸ்டாலின் வெளியே எடுத்தார். பின்னர் நூலின் முதல் பிரதியை ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நூல் குறித்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து குழும நிறுவனர் என்.ராம் உள்ளிட்டோர் ஆய்வுரையாற்றினர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முதல் பட ரிலீசுக்கு பிறகுதான் வீட்டில் பாத்ரூமே கட்டினோம்!- மாரி செல்வராஜ் உருக்கம்!

கள்ளர் பள்ளிகள்: “வரலாற்று அடையாளங்களை அழிக்க ஸ்டாலின் முயற்சி” – போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share