அத்துமீறும் பாகிஸ்தான்… ஸ்டாலின் எடுத்த முடிவு!

Published On:

| By Selvam

Mk Stalin conduct march against pakistan

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் அத்துமீறல்களைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (மே 10) பேரணி நடைபெற உள்ளது. Mk Stalin conduct march against pakistan

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான்.

நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.

நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம்” என்று தெரிவித்தார். Mk Stalin conduct march against pakistan

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share