‘காஷ்மீர்  எங்கள் தொண்டைக் குழாய்’… பாகிஸ்தானை சுடுகாடாக்கும் ராணுவ தளபதி முனீர் யார்?

Published On:

| By Minnambalam Desk

Pakistani Army Chief Asim Munir

பாகிஸ்தானின் வரலாறு என்பது பிரதமர்கள் கைது செய்யப்படுவது, ஆட்சியைக் கைப்பற்றுவது,  ராணுவ ஆட்சி, இந்தியாவுடன் போரிட்டு தோற்றுப் போவது என்பதாகவே தொடருகிறது. Pakistani Army Chief Asim Munir

பாகிஸ்தான் பெயரளவிலான ஒரு ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசு, ISI எனப்படுகிற உளவு அமைப்பின் ஆதிக்கம், ராணுவத்தின் ஆதிக்கம் என 3 அதிகார மையங்களின் பிடியில் சிக்கிய நாடுதான் பாகிஸ்தான். 77 ஆண்டுகால வரலாற்றில் 33 ஆண்டுகள், ராணுவ ஆட்சியின் பிடியில்தான் இருந்தது பாகிஸ்தான் என்பதில் இருந்தே அதன் உண்மை முகம் எதுவென உலகம் அறியும்.

பாகிஸ்தானின் அரசியல் தலைவர்களை அறிந்ததைவிட அதன் ராணுவ ஆட்சியாளர்களை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது உலகம். அப்படியான கொடுங்கோலர்களாகவும் யுத்த வெறி கொண்டவர்களாகவும்தான் பாகிஸ்தானின் ராணுவ தளபதிகள் காலந்தோறும் வருகின்றனர். Pakistani Army Chief Asim Munir

பாகிஸ்தானில் 1958-1969 காலத்தில் ராணுவ தளபதியாக இருந்தவர் அயூப் கான். அந்த நாட்டில் முதலாவது ராணுவ ஆட்சியை அமைத்தவர். இந்தியாவுடனான 1965 போரில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வ காரணமாக இருந்தவர்.

1977- 1988-ல் ராணுவ தளபதி ஜெனரல் ஜியாவுல் ஹக் ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார். ஆப்கானிஸ்தான் மீதான அன்றைய சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக ‘ஜிஹாதிகளை’ பிரசவித்தவர்தான் ஜியாவுல் ஹக்.

1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியை செயல்படுத்தியவர் ஜெனரல் பர்வேஷ் முஷாரப். கார்கில் போருக்கு காரணகர்த்தா.

2007- 2013-ல் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த கயானிதான், மும்பை தாக்குதலின் சூத்திரதாரியாக இருந்தவர். Pakistani Army Chief Asim Munir

பாகிஸ்தானில் ரத்த ஆறு ஓடுவதற்கு காரணமாக இருந்த இந்த ராணுவ தளபதிகள் பட்டியலில் இணைந்திருப்பவர்தான் தற்போதைய ராணுவ தளபதி அசிம் முனீர். 1986-ல் பாகிஸ்தான்  ராணுவத்தில் இணைந்த முனீர்தான் முந்தைய தளபதிகள் வழியில் பிரதமராக இருந்த இம்ரான்கானை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றினார்.

இம்ரான்கான் இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாத முனீர், ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் ராணுவ தளபதி என்ற நிலையில் இருந்து கட்டுப்படுத்துகிறவராக உருவெடுத்தார். முந்தைய ராணுவ தளபதி பஜ்வா, மென்மைப் போக்கை கொண்டவராக இருந்தார்; தற்போதைய ராணுவ தளபதி முனீர், மூர்க்கமான மதவாதியாக இருக்கிறார் என்பதை அவரது ஒவ்வொரு பேச்சுகளும் வெளிப்படுத்திக் கொண்டே வருகின்றன.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டிருந்த முனீர், பாகிஸ்தானின் தொண்டை குழாய்தான் ஜம்மு காஷ்மீர்; ஆகையால் காஷ்மீர் மக்களை ஒருபோதும் பாகிஸ்தான் கைவிடாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தது உலகின் எந்த ஒருநாடும் ரசிக்கவில்லை. இப்படியான முனீரின் ஆணவப் பேச்சுதான் இப்போது இந்தியாவிடம் பாகிஸ்தானை மரண அடி வாங்க வைத்திருக்கிறது.

முனீரின் ஆணவப் போக்கினால்தான் இந்தியா- பாகிஸ்தான் இடையே யுத்தம் தொடங்கி இருக்கிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள். இதனையடுத்தே முனீரை அடக்கி வைக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு அவரை கைது செய்துவிட்டது. வீட்டு காவலில் வைத்துவிட்டது என்றெல்லாம் செய்திகள் வலம் வருகின்றன. அதிகாரத்தையும் ரத்தத்தையும் ருசிபார்த்துவிட்ட ஓநாய் எப்போது ஓய்வெடுக்கப் போகிறது? என்பது முனீருக்கு சாலவும் பொருந்தும்! Pakistani Army Chief Asim Munir

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share