வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாடு வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.decision take Vanniyar Sangam leader
12 ஆண்டுகளுக்கு பிறகு மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் திருவிடந்தையில் நடைபெறும் மாநாட்டுக்கு, ‘இனமே எழு உரிமை பெறு’ என்ற வாசகங்களுடன் இலட்சினை வெளியிட்டு பாமக தலைமை அழைப்பு கொடுத்து வருகிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி இன்று மே 8 ஆம் தேதி வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கு அவசர மெசேஜ் ஒன்று அனுப்பினார்.
அதில், “ நாளை மே 9 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு சிதம்பரம் காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போகிறேன் மற்ற நிர்வாகிகளும் கலந்துக் கொள்ள வேண்டும்.
நான் ஒரு வன்னியர் சங்கத் தலைவர். எனக்கு முறையான அழைப்பு இல்லாமல் மாநாட்டை நடத்தவுள்ளனர். என்னை மதிக்க வில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மெசேஜ் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவனத்திற்கும் சென்றது. இதை படித்து பார்த்து அவர் டென்ஷனாகியுள்ளார்.
உடனே தனது சகோதரி காந்தியிடம் தகவல் சொல்லி டாக்டர் ராமதாஸ் மூலமாக பு தா அருள்மொழியை சமாதானம் செய்ய சொல்லியுள்ளார்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பாமக நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பு தா அருள்மொழியை சமாதானம் செய்யுங்கள் என்று கோபமாக சொல்லியிருக்கிறார்.

உண்ணாவிரதம் போராட்டம் பற்றியும் சமரசம் பேச்சுவார்த்தைப் பற்றியும் பு தா அருள்மொழியிடம் மின்னம்பலம் சார்பாக தொடர்புகொண்டு கேட்டோம்.
அப்போது அவர், “கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை, டாக்டர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையில் உள்ள விரிசலை சரி செய்யத்தான் உண்ணாவிரத போராட்டம் என்று மெசேஜ் அனுப்பினேன். இதையடுத்து ராமதாஸ் மற்றும் பாமக வன்னியர் சங்க பிரமுகர்கள் என்னிடம் பேசினார்கள். அதனால் பிரச்சினை முடிந்தது. உண்ணாவிரத போராட்ட முடிவை கைவிட்டுவிட்டேன்” என்றார்.
பாமக தலைவருக்கும் பாமக நிறுவனருக்கும் உள்ள பிரச்சினை இன்னும் புகைந்துக் கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் பாமக மூத்த நிர்வாகிகள். decision take Vanniyar Sangam leader
