டிஜிட்டல் திண்ணை: குடும்பத்தோடு ராஜினாமா… குமுறிய பொன்முடி

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் பற்றிய ஊடகச் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. Minister Ponmudi must resign his post cm pressure

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

ADVERTISEMENT

“உச்சநீதிமன்றத்தின் பலத்த கண்டனத்தை எதிர்கொண்டிருக்கிற அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் ஏப்ரல் 28 திங்களுக்குள், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனால் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமா உறுதி செய்யப்பட்டு விட்டது.

இதற்கிடையில் செந்தில்பாலாஜியோடு,  வனத்துறை அமைச்சகத்துக்கு பொறுப்பு வகிக்கும் பொன்முடியும் தனது  பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 24ஆம் தேதி பொன்முடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தகவல் அனுப்பினார். காரணம் ஏப்ரல் 6ஆம் தேதி அன்பகத்தில் பொன்முடி பேசிய அந்த ஆபாச பேச்சுதான்.

ADVERTISEMENT

இதை அறிந்த பொன்முடி அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்தார் என்கிறார்கள்.

இதுகுறித்து பொன்முடி தனக்கு நெருக்கமான வட்டாரங்களில், ‘என்னுடைய அந்தப் பேச்சு தவறு என்று பொது மன்னிப்பு கேட்டு விட்டேன். அதற்கு முன்பே என்னுடைய  துணைப் பொதுச் செயலாளர் என்ற கட்சிப் பதவியை பறித்துவிட்டார்கள். இப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால்  ஒரு தவறுக்கு இரு தண்டனையா?

ADVERTISEMENT

அந்த அமைச்சர் இப்படி பேசவில்லையா…  இந்த அமைச்சர் அப்படி பேசவில்லையா… ஆனால் என்னை மட்டும் ஏதோ குறிவைத்து  தண்டிக்க வேண்டுமா? ’ என்று குமுறியிருக்கிறார். மேலும், அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திட கால அவகாசம் கேட்டிருக்கிறார்.

ஆனால் முதலமைச்சர் தரப்பிலிருந்து அவகாசம் எல்லாம் தர முடியாது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் முதலமைச்சரே அமைச்சர் பதவியை பறித்து அறிவிப்பு வெளியிட வேண்டியிருக்கும் என்று பொன்முடிக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, ’என்னுடைய அமைச்சர் பதவியும் ராஜினாமா செய்து விடுகிறேன். இப்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் என்னுடைய மகன் டாக்டர் கௌதம சிகாமணியின் மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லி விடுகிறேன். எங்கள் குடும்பமே ஒதுங்கிக் கொள்கிறோம்’ என்று  பொன்முடி  தரப்பில் இருந்து துணை முதலமைச்சர் உதயநிதிக்கு உணர்ச்சிவசப்பட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்கள்.  Minister Ponmudi must resign his post cm pressure

இது பற்றி திமுக மேல்மட்ட வட்டாரங்களை விசாரித்த போது, ‘அமைச்சர் பொன்முடியின் அந்த ஆபாச பேச்சு முதலமைச்சரை மிகக் கடுமையான கோபத்தில் ஆழ்த்தியது. அதேபோல ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வரும் முதலமைச்சரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களையும் பொன்முடியின் இந்த பேச்சு கோபப்படுத்தி இருக்கிறது. பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோவது உறுதி.

இந்நிலையில் அமைச்சர் பதவியை இழக்கும் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் இப்போது வகிக்கும் துறைகளை புதிய அமைச்சர்களுக்குக் கொடுக்கலாம் என முதலில் ஆலோசிக்கப்பட்டது. இன்னும் தேர்தலுக்கு 9-10 மாதங்களே இருக்கும் நிலையில், அனுபவமில்லாத புதியவர்கள் அமைச்சர்களானால்  ஆட்சிக்கு எந்த சங்கடமும் வந்துவிடக் கூடாது. எனவே, இப்போது இருக்கும்  அமைச்சர்களுக்கே துறைகளை பகிர்ந்து கொடுத்துவிடலாம் என்பதை நோக்கி முதல்வரின் ஆலோசனை சென்றுகொண்டிருக்கிறது. Minister Ponmudi must resign his post cm pressure

அதேநேரம்  அடித்தால் லக் என்ற அடிப்படையில்…  அமைச்சர் பதவியை பெறுவதற்கும்,  வளமான துறைகளைப் பெறுவதற்கும் விடா முயற்சியில் இருக்கிறார்கள் திமுக எம்.எல்.எ.க்களும், சிட்டிங் அமைச்சர்களும்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share