இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

balebalu
சாதகமான தொகுதி கோரி காத்திருந்த அண்ணாமலைக்கு சீட் மறுத்த பாஜக – செய்தி
சாட்டையால் அடித்து கொண்டதெல்லாம் வீணா போச்சே

ச ப் பா ணி
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது ஒரு மாபெரும் முதலீடு; ஆனால் அதை மீறுவது, அந்த முதலீட்டை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுவது என்று அர்த்தமாகும்.

mohanram.ko
எப்போ குரூப் 4 தேர்வு அறிவிச்சாலும், அப்ளை பண்ணிட்டு படிக்காம ஃபெயில் ஆகுற மாதிரி தான், எந்த தேர்தல் வந்தாலும் வேட்பாளரா அறிவிச்சிட்டு தோற்று போறவங்களும்….

சரவணன். 𝓜
மாடு மேய்க்க ஹெலிகாப்டர் தரேன் ன்னு சீமான் சொல்றதை எல்லாம் ரொம்ப சுவாரஸ்யமா கேட்டுக்கிட்டு இருக்காங்க மாமா…
~ தம்பிங்க தானே மாப்ள…?
தம்பிங்களா… மீம்ஸ் கிரியேட்டர்களும் யூடியூப்ல ட்ரோல் பண்றவங்களும் மாமா…

ச ப் பா ணி
கடவுள் எனக்கு நிறைய செய்திருக்கார்
என்ன செய்திருக்கார்?
வச்சு செய்திருக்கார்

ArulrajArun
சாதகமான தொகுதி கோரி காத்திருந்த அண்ணாமலைக்கு சீட் மறுத்த பாஜக – செய்தி
IPS புடிச்சு அரசியல்வாதி ஆக்கி அலங்கோல படுத்துகிற உலகம்…
சரவணன். 𝓜
“பா.ஜ.க-வின் தொண்டனாக தே.ஜ. கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களுடன் இணைந்து தோளோடு தோளாக பணியாற்றுவேன்” – அண்ணாமலை.
அப்பாவை பார்த்துக்கணும்னு சொன்னதெல்லாம் பொய்யா கோபால்…

mohanram.ko
கூப்பிட கூப்பிட திரும்பி பார்க்காம போற மாதிரி தான்…. எத்தனை முறை ஃபோன் பண்ணாலும் எடுக்காம இருப்பதும்…

Sasikumar J
‘ கடமையா’ செய்வதற்கும், ‘கடமைக்கு’ செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதைப் பொறுத்தே தான் ‘வெற்றி, தோல்வி’ என்று அமையும்…!

caroline
செய்யுற வேலையை லவ் பண்ணி பண்ணுங்கடனா
வேலை செய்யுற இடத்துல லவ் பண்ணிட்டு சுத்திட்டு இருக்காணுவ

லாக் ஆஃப்
