இன்னைக்கு வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போனா அம்மாவும், தம்பியும் கவலைல உட்கார்ந்திருந்தாங்க…
சரி என்ன பிரச்சினைனு கேப்போம்…
ஏன்மா சோகம்னு கேட்டேன்.. இந்த பவுனு விலைதான் இப்படி ஏறிகிட்டு போவுதே, உங்க அப்பாகிட்ட ஒரே ஒரு செயின் வாங்கி தாங்கனு சொன்னா, நான் வாங்குற சம்பளத்துக்கு இதெல்லாம் வாங்க முடியாதுனு வெளிய கிளம்பிட்டாருனு சொன்னாங்க…
சரி தம்பிகிட்ட உனக்கு என்னடாபிரச்சினைனு கேட்டா, கடலை மிட்டாய் விலையும் ஏறிடுச்சு… அப்பாகிட்ட காசு கேட்டேன் தரலனு சொன்னான்..
நாங்க பேசிக்கிட்டு இருக்கும் போதே, பக்கத்துவிட்டு அக்கா… சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜுவல்லரி சொக்க வைக்கும், சொக்க வைக்கும், ஜுவல்லரினு புதுசா வாங்குன தோடு டிசைனு எப்படி இருக்குனு காட்டிட்டு போக வந்தேனு சொல்றாங்க…
அப்பா இன்னைக்கு பாவும்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
ஓய்வாக இருக்கும் போதுதான் காலாவதியான கவலைகள் புதுப்பிக்கப்படுகிறது

ArulrajArun
மனுஷன் படைச்சதிலே உருப்படியான ரெண்டு விஷயம்… ஒன்னு ஆண்ட்ராய்டு ஃபோன், இன்னொன்னு அன்லிமிடெட் டேட்டா !

balebalu
நடிகரின் பேட்டிக்காக ஊரே வெயிட் பண்ணிட்டு இருக்கு
ஆனா இவருக்கு பதில் அவர் ங்குற மாதிரி
மகனுக்கு பதில் அப்பா
பிரஸ் மீட் வெச்சு கூட்டணி பேசுறாரே

ArulrajArun
ரொம்ப வருஷம் லேப்டாப் கொடுக்காம திடீரென காலேஜ் ஸ்டூடண்டுக்கு லேப்டாப் கொடுக்கறது எல்லாம் corona batch ல பாஸ் ஆகிறது மாதிரி தான்…
Writer SJB
திருமண வயதில் பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் தயவு செய்து தினசரி தங்கம் விலை செய்தியை பார்க்க வேண்டாம்..!
இனி மாப்பிள்ளை வீட்டார் தங்கம் கேட்டால் பொண்ணு தர முடியாது என்று தைரியமாக சொல்லுங்க..!!

ச ப் பா ணி
வீரம்னா என்னனு தெரியுமா?
Wife க்கு பயப்படாத மாதிரி நடிக்கிறது

Sasikumar J
அவசர அவசரமா குளிர்ல அடிச்சு புடிச்சு கிளம்பி ஆபீஸ்க்கு போனா, நமக்கு அப்புறம் ஒருத்தன் வருவான் அவன் திட்டு வாங்க மாட்டான், ஆனா அதுக்கு முன்னாடி போன நம்ம நல்லா வாங்குவோம் இவ்வளவு தான் வாழ்க்கை…!

mohanram.ko
தங்கம் விலை ஏறிடுச்சு ன்னு வெள்ளியில் நகை வாங்கலாம்னு நினைச்சா… வெள்ளி விலையும் ஏறிடுச்சி… இப்ப பித்தளையில் வாங்கறதா, ப்ளாஸ்டிக்ல வாங்குறதான்னு தெரியல….

லாக் ஆஃப்
