அடையாறு வடை : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல். எந்த வருஷமும் இல்லாம இந்த வருஷம் சென்னைல பல இடத்துல டிவிய வச்சி லைவ் டெலிகாஸ்ட் பண்ணாங்க..

காலைல டீக்கடைக்கு போனப்ப, அதுக்கு பக்கத்துலயும் ஒரு டிவில பட்ஜெட் லைவ் ஓடிட்டு இருந்துச்சி. ஆனா அத பாக்கதான் அங்க பெருசா கூட்டம் இல்ல.

இத பாத்த நண்பர், “என்னய்யா நடுரோட்டுல டிவிய மாட்டிருக்காங்க… ஆனா யாருமே இல்ல. வா போயி நாம டீக்குடிச்சிட்டே அந்த காமெடி சேனல் போட்டு பாக்கலாம்’னு சொன்னாரு..

”யோவ், அதுல ஓடிட்டு இருக்குற பட்ஜெட்டே காமெடியா தான் போகுது… ’அடையாறு அழகுபடுத்துதல் திட்டம்’னு தங்கம் தென்னரசு இப்போ வாசிச்சாருல… இந்த ஒரே திட்டத்த கடந்த 3 வருஷமா கொஞ்சம் மானே, தேனே போட்டு வாசிச்சிட்டு இருக்காங்க”னு சொன்னேன்.

அதே கேட்டு, ‘ஓ டெல்லி வடை மாறி, இது அடையாறு வடை’னு சொல்லி நண்பன் சிரிக்குறான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… memes trolls tweets update kumaru

குருநாதா

அவளுக்காக நெறைய தடவ அழுதுருக்கேன்
ஏமாத்திட்டாங்களா ப்ரோ?
வெங்காயம் உரிக்க சொல்லுவா

Sasikumar J

எரிச்சல் கொடுக்காத சத்தம் ஏடிஎம் மெஷின் பணத்தை எண்ணும் போது கொடுப்பதாகத்தான் இருக்கும்…!

ச ப் பா ணி

Happy week end னே
நாளைக்கு வேலைக்கு இருக்கு. போடா போடா

balebalu

நாமெல்லாம் காலம் காலமா ‘ ரூ ‘ ன்னு தானே பயன்படுத்தி கணக்கு வழக்கு எழுதிக்கிட்டு இருக்கோம்
திடீர்னு இப்ப எதுக்கு ஷாக் ஆகி ஆபத்து, பிரிவினை என்றெல்லாம் புலம்புறாங்க

ச ப் பா ணி

எண்ணெய் விடாத
வீட்டின் கேட் சத்தம்தான்
எல்லோரின் வருகையையும்
சொல்லும் அசரீரி

விமலிசம்

ஒன்றிய அரசு ஒரு பட்ஜெட் போடுதுண்ணா இங்க மாநில அரசும் அவங்க பங்குக்கு ஒரு பட்ஜெட்.ரெண்டு பேரும் விளையாடுறீங்களா?இதுக்கிடையில நம்ம பசங்க புகுந்து சர்கார் 400 கோடினு அவங்க ஒரு பட்ஜெட் போடுறாங்க..யாருயா நீங்கெல்லாம்

ArulrajArun

5,000 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் – அண்ணாமலை
ஏன் Central ல நீங்க தானே ஆட்சில இருக்கீங்க மது தயாரிக்கும் ஆலைக்கு போய் போராட்டம் பண்ணுங்க பாப்போம்

லாக் ஆஃப் memes trolls tweets update kumaru

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share