தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)
மதுரவாயல் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் 2011-ல் சிபிஎம், 2016-ல் அதிமுக, 2021-ல் திமுக வெற்றி பெற்றுள்ளன.
2021 தேர்தலில் திமுக வேட்பாளர் கணபதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பெஞ்சமினை 31,721 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முறையும் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. கணபதி, அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மோதுகின்றனர்.
2016-ல் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பெஞ்சமின்.
2026ல் தவெக சார்பில் ரோகினி திரையரங்க இயக்குநர் ரேவந்த் சரண் , நாதக சார்பில் ரேவதி ஆகியோர் களம் காண்கின்றனர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக-38%
அதிமுக-28%
தவெக-23%
நாதக-8% வாக்குகள் பெறும்
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
