தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் வரும் பாஜக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 6) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும், பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
- தமிழ்மண்ணில் நின்று, “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
- நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
- கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
- இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
- கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என தெரிவித்துள்ளார்.
