நான் அம்மாவா மாறிட்டேன்! – அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

விளம்பரங்களில் பல வகை இருக்கு. நெய்லிங் வகை, அதாவது அணி அடித்ததுபோல தங்கள் ப்ராடக்டை வாடிக்கையாளர்களின் மனதில் பதியவைப்பது, கோபால் பல்பொடி விளம்பரம் எல்லாம் அந்த வகை. அதேபோல, கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப மந்திரம்போல உருவேற்றியே, நம் ஆழ்மனசுக்குள் பிராண்டின் பெயரை நுழையவைக்கும் விளம்பர யுக்தி. இரிட்டேஷனல் விளம்பரங்கள் ஒரு வகை. உதாரணமா, ஒரு சிமெண்ட் விளம்பரத்தைச் சொல்லலாம். திரும்பத் திரும்ப கேள்விகேட்கும் சந்தேகப் பிராணி கணவன் (இந்த இடத்தில் கண்ணீர் வர ஸ்மைலி போட்டுக்கோங்க அல்லது நாட்டாமை மிக்சர் பார்ட்டி மீம் வச்சுக்கோங்க) அவனுக்கு நம்பிக்கையை ஊட்டும் மனைவியின் தன்னம்பிக்கை. ஒரு கட்டத்தில் அந்த கணவன்மீது கோபமும் எரிச்சலும், அந்த மனைவிமீது நம்பிக்கையுமாய் இருந்தது. நெட்டிசன்களின் மீம்ஸ் புண்ணியத்தில் செம காமெடியாகி இன்றைக்கு அந்த சிமெண்ட் பெயரைப் பார்க்கும்போதெல்லாம் மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக்கொள்கிறது. அதே நோக்கத்திலோ அல்லது அளவுக்குமீறிய காசோ தெரியவில்லை! எந்தச் சேனலைத் திருப்பினாலும் ஒரு நகைக்கடை விளம்பரம் திரும்பத்திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கிறது. நம் செண்டிமென்ட்டைத் தொடுகிறேன் என்றபெயரில், அவர்களின் மெலோ ட்ராமா வகை மொக்கை தாங்கவே முடியவில்லை. ஒரு சேனலில் அவர்களைக் கண்டு அடுத்த சேனலுக்குத் தாவினால் அங்கும் அவர்கள் என டார்ச்சராகிக் கொண்டிருக்க, நமது நெட்டிசன்கள் களத்தில் இறங்கிவிட்டனர். மக்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும் மீம்களில் ஒன்று இங்கே,

பாப் பாடகி மைலி சைரஸ், பொங்கோ பொங்கு என பொங்கிவிட்டார். அதெல்லாம் சரி, மைலி யாருன்னு கேக்குறீங்களா? உங்கள் பொண்ணுகிட்டயோ, பையன்கிட்டயோ ‘ஹன்னா பார்பரா’ தெரியுமான்னு கேளுங்க. அந்த ஹன்ன பார்பரா தொடரின் நாயகியும் (அதில் குழந்தை நட்சத்திரம்) தற்போதைய பாப் ஸ்டாருமானவர்தான் மைலி சைரஸ். இந்த பாப்பா 21 வயசு ஆனாதிலிருந்து அட்டகாசம் தாங்கல. ட்ரஸ்ஸே போடாமலே பாப் ஆல்பங்களை வெளியிடுவது, படு கவர்ச்சியான மூவ்மெண்டுகளை நிகழ்ச்சிகளில் அரங்கேற்றுவதுன்னு இல்லாத ஆட்டம்போட்ட மைலி, தனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று படங்களை வெளியிட்டிருந்தார். மூன்றாவது படத்தில் அழுது வீங்கிய கண்களுடன் மைலி சைரஸ் தோன்றுகிறார். முதல் படத்தில்,

ADVERTISEMENT

அமெரிக்காவின் பெண் வேட்டையாளர்களில் ஒருவரான (வேட்டைராணி என்றும் சொல்லுவார்கள்) ரெபைக்கா ப்ரான்ஸிஸ் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளரான டொனால் ட்ரம்ப்வுடன் நிற்கும் படமும், அதனுடன் மலைச்சிங்கம் ஒன்றை ரெபைக்கா வேட்டையாடிய படமும் இணைந்திருக்கிறது. டொனால்ட் வென்றால் நமது மக்கள் மட்டுமல்ல; அப்பாவி மிருகங்களும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். நானும் எல்லா படத்தையும் பார்த்து ஃபீல் ஆகிட்டேன். பின்ன என்னங்க ஒவ்வொரு படமும் 20 லட்சம் லைக்ஸ்க்கு மேலே வாங்கியிருந்துச்சுன்னா ஃபீல் ஆகாம இருக்குமா?

ADVERTISEMENT

-லாக் ஆஃப்,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share