OTT-யில் நேரடி ரீலீசாகும் ‘லாக்கப்’!

Published On:

| By Balaji

வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள ‘லாக்கப்’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு 125 நாட்கள் கடந்துவிட்டது. கொரோனா பரவல் குறையாத நிலையிலும், திரையரங்குகளுக்கு இப்போதைக்குத் தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாலும் திரைத்துறையினர் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். இந்த நிலையில் முழு வேலைகளும் முடிந்து ரிலீசுக்காகக் காத்திருக்கும் சில திரைப்படங்களை நேரடியாக டிஜிட்டல் தளங்களில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுகுறித்து அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

ADVERTISEMENT

அந்த வகையில் அறிமுக இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் வைபவ்-வாணி போஜன் இணைந்து நடித்திருக்கும் ‘லாக்கப்’ திரைப்படம், ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

.. @vp_offl, @actor_vaibhav, @shamna_kasim mattrum @vanibhojanoffl nadikkum oru paraparapana suspense crime thriller. Neenga ready a ? Varum August 14, ZEE5 il #SuspenseAtEveryTurn#LockUponZEE5@Nitinsathyaa @SGCharles2 @ArrolCorelli @editor_mad @tridentartsoffl pic.twitter.com/DnO9Y4uefj

— ZEE5 Tamil (@ZEE5Tamil) July 20, 2020

நிதின் சத்யா தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு அரோல் கோரெல்லி இசையமைத்துள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share