குறிஞ்சிப்பாடி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ. யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள் தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

 குறிஞ்சிப்பாடி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். 

அதிமுக சார்பில் புவனேந்திரன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கோலன் ஆகியோர் களம் காண்கின்றனர். 

2021 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராம ஜெயத்தை 17,527 வாக்குகள் வித்தியாசத்தில் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தோற்கடித்தார். 

1996, 2001, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் எம்ஆர்கே வெற்றி பெற்றுள்ளார். இடையில் 2011 தேர்தலில் மட்டும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். 

இந்த முறை திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

நமது சர்வே முடிவுபடி, 

திமுக-44%
அதிமுக-36%
தவெக-15%
நாதக-5% வாக்குகள் பெறும்

மீண்டும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.1

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? கடலூர் | Cuddalore | Minnambalam Mega Survey Results 2026| Election 2026
  1. ↩︎
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share